LATEST NEWS
KPY பாலா செய்த அடுத்த தரமான சம்பவம்…. பட்டென காலில் விழுந்த சிறுவனின் தந்தை…. வைரலாகும் வீடியோ…!!
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.
தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா.
சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கரம் வாங்கி கொடுத்தார். பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தார். மற்றொரு இளைஞனுக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தார். இந்நிலையில் சிறுவன் ஒருவருக்கு அவர் உதவி செய்து இருக்கின்றார். அதாவது மாதேஸ்வரன் என்ற சிறுவனுக்கு கண் பார்வை போனது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
View this post on Instagram
சிறுவனின் தந்தை பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், இதனை அறிந்த பாலா அவருக்கு சிகிச்சைக்கான பணத்தை கொடுத்து உதவி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் உதவியுடன் அதை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். பாலாவை பார்த்ததும் அவரது தந்தை காலில் விழுந்து நன்றி சொன்ன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.