தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நரபலி.. 2 மாத பச்சிளம் குழந்தைக்கு சொந்த குடும்பமே தீட்டிய பயங்கர ஸ்கெட்ச்.. போலீசாரின் த்ரில்லர் வேட்டை..!! – cinefeeds
Connect with us

CRIME

தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நரபலி.. 2 மாத பச்சிளம் குழந்தைக்கு சொந்த குடும்பமே தீட்டிய பயங்கர ஸ்கெட்ச்.. போலீசாரின் த்ரில்லர் வேட்டை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில், தங்களது குடும்பத்தில் நேரிடும் அகால மரணங்களைத் தடுப்பதற்காக நேபாளத்தைச் சேர்ந்த மாந்திரீகர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி, இரண்டு மாத பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்கக் கடத்திய சொந்த அத்தையையும் பாட்டியையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தீபாவளி அமாவாசை அன்று இரவில் இந்த நரபலி சடங்கை நடத்துவதற்காக அந்தக் குடும்பத்தினர் திட்டமிட்டுக் குழந்தையைக் கடத்தியுள்ளனர். குழந்தை மாயமானது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

குற்றவாளிகளைப் பிடிக்கப் பாடுபட்ட மகாராஜ்கஞ்ச் காவல் துறையினர், கடத்தல் கும்பலின் நடமாட்டத்தைக் கண்டறிய 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைத் தீவிரமாக ஆய்வு செய்து பின்தொடர்ந்தனர். இந்த அதிரடித் தேடுதல் வேட்டையின் மூலம் டெல்லி வரை சென்ற காவல்துறையினர், நரபலி கொடுக்கப்படவிருந்த பச்சிளம் குழந்தையைப் பத்திரமாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மூடநம்பிக்கையின் உச்சகட்டமாகச் சொந்தக் குடும்பத்தினரே குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற இந்த அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in