அடக்கடவுளே..! “நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… பதறி அடிச்சு ஓடிவந்த அம்மா…” பெத்த அப்பாவையே கழுத்தை அறுத்து கொன்ற மகன்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! “நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… பதறி அடிச்சு ஓடிவந்த அம்மா…” பெத்த அப்பாவையே கழுத்தை அறுத்து கொன்ற மகன்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தந்தை கண்டித்த ஆத்திரத்தில் 15 வயது மகன் தூங்கி கொண்டிருந்த தந்தையின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் லோனி காவல் நிலையத்திற்குட்பட்ட ஆஷியானா சிட்டி புத் பஜார் பகுதியில் வசிக்கும் இர்ஃபான் அகமது என்ற தந்தை, கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனைப் படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரிவது குறித்து கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த அந்த சிறுவன், நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் தந்தை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு அவரது கழுத்தை அறுத்துள்ளான்.

தந்தையின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தாயார், படுக்கையறையில் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தனது மகன் கையில் கத்தியுடன் நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து இர்ஃபானை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் கொடூர சம்பவம் குறித்து சிறுவனின் தாயாரே நேரில் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்து புகார் அளித்தார்.

Advertisement

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை உடனடியாகக் காவலில் “அலறி அடிச்சு ஓடிவந்த அம்மா…”எடுத்ததுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். தந்தை கண்டித்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்ற மகனே தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in