“ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லை..” குரியன் குழு கலைப்புக்கு பின்னணியில் நடந்தது என்ன..? தவெக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லை..” குரியன் குழு கலைப்புக்கு பின்னணியில் நடந்தது என்ன..? தவெக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி..!!

Published

on

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்தக் குழு மத்திய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா? மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரங்கள் மற்றும் உறவுமுறைகள் குறித்து ஆய்வு செய்யவே முந்தைய அரசால் இக்குழு அமைக்கப்பட்டது என்றார். அக்குழு தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள இந்தச் சூழலில், அந்தக் குழு தேவையற்றது என்று கூறி அதனை நிராகரிப்பது, சில தரப்பினரை மகிழ்விப்பதற்காகவும், தங்களுக்குள் இருக்கும் அச்சத்தின் காரணமாகவுமே இந்தக் குழுவைக் கலைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

மேலும், தமிழ்நாடு மக்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் இந்த அரசிற்கு எந்த அக்கறையும் இல்லை என்று கூறிய அவர், தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்களின் உரிமைகள் மீதும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதற்கான துணிவும் தங்களிடம் இல்லை என்பதை இந்த நடவடிக்கையின் மூலம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றும் கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in