10 வருடங்கள் ஆகியும் இன்னும் ஏன் குழந்தை இல்லை..? எங்களுடைய வலி வேதனை… பதிலடி கொடுத்த சாந்தனு-கிகி..!! - cinefeeds
Connect with us

CINEMA

10 வருடங்கள் ஆகியும் இன்னும் ஏன் குழந்தை இல்லை..? எங்களுடைய வலி வேதனை… பதிலடி கொடுத்த சாந்தனு-கிகி..!!

Published

on

திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார். இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து  +2, அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான பின் தான் காதலித்து வந்த பிரபல தொகுப்பாளினி கிகியை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது கிகி தனியாக 2 நடன நடனப்பள்ளிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பலரும் இவர்களிடம் 10 வருடங்கள் ஆகியும் இன்னும் ஏன் குழந்தை இல்லை என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். அதாவது, “கடவுள் கொடுக்கும்போது கொடுக்கட்டும்..! எல்லோரும் எங்களிடம் குழந்தை எப்போது பிறக்கும் என கேட்கிறார்கள். எங்களுடைய குழந்தைகளை நீங்களா கவனித்துக் கொள்ள போகிறீர்கள்? நாங்கள் இப்படி பேசுவதை பார்த்து நீங்கள் திமிராகவோ ஆணவமாகவோ பேசுகிறோம் என்று நினைக்காதீங்க. எங்களுடைய வலி வேதனையை தான் நாங்கள் இப்படி சொல்கிறோம். எங்களுக்கு மன அழுத்தம் தான் வருகிறது. கடவுள் எங்களுக்கு எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது கொடுக்கட்டும்” என்று கூறியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in