CINEMA
மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம்… சம்பளம் மட்டும் பல கோடி ..!!

அயன், பையா, பாகுபலி, வீரம், தேவி, அரண்மனை 4 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் விருது மற்றும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகை தமன்னா கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் விளம்பரம் தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு வருடங்களுக்கு 6.2 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட திரை உலகில் திறமைக்கு பஞ்சமா? உள்ளூர் நடிகைகளை நியமிக்காமல் இந்தி நடிகைகளை நியமிப்பது ஏன்? என கன்னட மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு என்று அம்மாநில அமைச்சர் எம் பி பாட்டில் விளக்கம் அளித்துள்ளார்.