CINEMA
கனா காணும் காலங்கள் சங்கவியை நியாபகம் இருக்கா..? இப்போ என்ன பண்ணுறாங்க தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!!!

விஜய் தொலைக்காட்சியில் 2006 முதல் 2013ஆம் வருடம் வரை ஒளிபரப்பான பிரபலமான சீரியல் கனா காணும் காலங்கள். இந்த தொடர் அப்போதைய இளைஞர்கள், பருவ வயதினரடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலுக்கு பல ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொடரில் நடித்த பெரும்பாலானோர் சினிமாவில் படங்களில் நடித்தார்கள். சிலர் அடையாளம் தெரியாமலே போனார்கள். அந்த வகையில் கனா காணும் காலங்கள் தொடரில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மோனிஷா. அவருடைய கதாபாத்திரம் பலருக்கும் நினைவிருக்கலாம். சிலர் மறந்து போயிருக்கலாம்.
சீரியல் முடித்த கையோடு மோனிஷா மருத்துவ படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார் .அங்கு மருத்துவம் படித்துவிட்டு பிறகு தொகுப்பாளியாகவும் வலம் வந்தார். மருத்துவர் என்று அடையாளமும் அவருக்கு உண்டு. கனடா, துபாய் என வெளிநாடுகளில் இருந்தவர் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். மேலும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.