LATEST NEWS
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மனைவி யார் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படம்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த சீரியல் மூலமாக கோலங்கள் தொடருக்கு பிறகு எதிர் நீச்சல் தொடரால் மக்கள் மனதை வென்று விட்டார் இயக்குனர் திரு செல்வம்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர் மெட்டிஒலி சீரியல் மூலம் இணை இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு கோலங்கள் என்ற தொடர் மூலம் திருசெல்வம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த தொடருக்காக பல விருதுகளை வாங்கிய இவர் அதனை தொடர்ந்து பல சீரியல்களை இயக்கினார். இந்நிலையில் திருச்செல்வம் அவர்களின் மனைவியின் பெயர் பாரதி. அவர் ஒரு சிவில் இன்ஜினியர் ஆக உள்ளார். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்துள்ள நிலையில் தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
