CINEMA
பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பிய சூப்பர் ஸ்டார்…! கூலி திரைப்படத்தின் 4 நிமிட காட்சிகள் ரத்து…. பேமிலி ஆடியன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி…!

பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஆமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையில் ரிலீஸ் ஆன கூலி படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் 6 நாட்களில் கூலி திரைப்படம் 425 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டியுள்ளது. இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி திரைப்படத்திற்கு A சென்சார் வழங்கப்பட்டிருப்பதால் 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே படத்தை பார்க்க முடியும்.
இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிருப்தியில் இருந்தனர். தற்போது சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்த நிலையில் படத்திலிருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர் அனுமதியுடன் 18 வயது கீழ் உள்ளவர்களும் படம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.