CINEMA
“மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்” ஒரே போடாய் போட்ட ஆர்த்தி ரவி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். ஆனால் சமீபத்தில் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார்.
இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி, ஆர்த்தி தாயார் என மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் ஆர்த்தி – ரவி மோகன் விவாகரத்து வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனு அளித்துள்ளார் . இதனையடுத்து நடிகர் ரவிமோகன் ஜூன் 12ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.