CINEMA
அவர் இவ்வளவு காலம் அமைதியாக இருந்ததற்கு காரணம்… இப்போ ரகசியம் வெளியே தெரிஞ்சிடுச்சி… ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். ஆனால் சமீபத்தில் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார்.
இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி, ஆர்த்தி தாயார் என மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பிரிவிற்கு வெளியில் இருந்து வந்த மூன்றாவது நபரே காரணம். “உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்த அவர், எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டுவந்து விட்டார். அவரை நாங்கள் கட்டுக்குள் வைத்திருந்தோம் என்று கூறுகிறாரே, அது உண்மை என்றால், இங்கிருந்து வெளியேறியதும் அவர் தனது பெற்றோரின் வீட்டுக்குத்தானே சென்றிருக்க வேண்டும்?
View this post on Instagram
ஆனால் அவர், வாழ்க்கையை சீர்குலைத்த ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். என்னுடன் ஏன் திருமண ஆண்டு விழாக்கள் கொண்டாட வேண்டும், எங்களுடன் ஏன் விடுமுறை தினங்களை கொண்டாட வேண்டும்? குடும்பச் சூழல் ஒத்துவரவில்லை என்றால், அவர் எதற்காக என்னோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவர் இவ்வளவு காலம் அமைதியாக இருந்ததற்கு காரணம், எனக்கு அவர் குறித்த ரகசியம் தெரிந்து விட்டது என்பதால் மட்டும்தான்” என்று கூறியுள்ளார்.