CINEMA
தமிழில் 150 மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் காலமானார்… சோகத்தில் திரையுலகம்..!!!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ராஜேஷ். இவர் முதன்முதலாக அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதுமட்டுமின்றி நேருக்கு நேர், சாமி, ரெட் உள்ளிட்ட 150கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வந்தார். மேலும் இவர் பல பிசினஸ்களும் செய்து வருகிறார். இந்த நிலையில் 45 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் இவர் உடல்நல குறைவு காரணமாக தனது 75 வயதில் இன்று திடீரென்று காலமானார். அதாவது மூச்சுத் தென்றல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மரணம் திரை உலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.