CINEMA
இனி இருவரும் இதை செய்யக்கூடாது… உடனே நீக்கணும்… ஆர்த்தி-ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது . இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். ஆனால் சமீபத்தில் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார்.
இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி, ஆர்த்தி தாயார் என மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தார்கள். பிறகு ஆர்த்தி மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர். ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.