CINEMA
“இங்க இருந்த தெருவை காணோம் சார்” வடிவேலு பாணியில் இறங்கிய ஜிபி முத்து… என்ன விஷயம் தெரியுமா..?

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டிக் டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளில் வீடியோ பகிர்ந்து வந்தார். இப்படி வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜிபி முத்து தற்போது தன்னுடைய வீடு இருக்கும் தெருவை காணவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதாவது உடன்குடி பெருமாள்புரத்தில் இருந்த கீழதெரு என்ற தெருவை தான் காணவில்லை என அவர் கூறி இருக்கிறார். மேலும் அங்கே இருந்த கோவில் இடத்தை சில கள்ளபத்திரம் வைத்து மோசடியாக விற்பனை செய்து இருக்கின்றனர் என்று புகாரளித்துள்ளார்.