CINEMA
கெனிஷா என் அழகான துணை.. மனைவியை மட்டுமே பிரிகிறேன்… நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது .
All these years I was being stabbed in the back, now I’m only glad that I’m being stabbed in the chest..
First and Final One From My Desk !
With Love
Ravi Mohan
‘Live and Let Live’ pic.twitter.com/Z0VbFYSLjU— Ravi Mohan (@iam_RaviMohan) May 15, 2025
இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். ஆனால் சமீபத்தில் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார். இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ரவிமோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கெனிஷா என் அழகான துணை. என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர் அவர். தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை. எனது மகன்களை நான் பிரியவில்லை, மனைவியை மட்டுமே பிரிகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.