CINEMA
பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்..? இன்று மாலை அறிவிக்க போகிறார்களா..? வெளியான தகவல்..!!

நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாக கூறினார். ஆனால் பெண் யார் என்று கூறவில்லை. இந்த நிலையில் விஷால் திருமணம் செய்ய போகும் பெண் யார் என்ற தகவல் இன்று காலை முதலே பரவி வருகிறது. அதாவது பிரபல நடிகை சாய் தன்சிகா தான் என்று கூறப்படுகிறது . நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். நட்பாக பழகிய இவர்களுடைய உறவு பிறகு காதலாக மாறியது என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கம் கட்டிடம் திறந்த கையோடு அதே மாதிரி செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று மாலை சாய் தன்சிகா நடித்துள்ள யோகிடா என்ற படத்தின் விழா நடக்க உள்ளது. இந்த பட விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ளப் போகிறார். இந்த விழாவில் இருவரும் தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.