CINEMA
இதெல்லாம் முட்டாள்தனம்…. 99% அப்படிதான் இருந்தது…. ஜோதிகாவின் ஆடை விமர்சனம் குறித்து பேசிய பிரபலம்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா. 2000 ஆம் வருடங்களில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இவர் 36 வயதிலேயே திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரைப்படத்திற்கு என்ட்ரி கொடுத்து அதன் பிறகு ஜாக்பாட், ராட்சசி, தம்பி, நாச்சியார் என பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். பெண்கள் தங்களுடைய துறையில் சாதிப்பதற்கு திருமணமோ அல்லது வயதோ ஒருபோதும் தடை போட முடியாது என்பதை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவருடைய உடை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய பத்திரிகையாளர் அந்தணன், ஜோதிகா கண்ணியமான வகையிலேயே உடை அணிந்திருந்தார்.
அவருடைய உடை குறித்து பேசுவது முட்டாள்தனம் அவருடைய உடையை ஊடுருவி பார்த்துவிட்டு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். பாலிவுட்டில் ஏறக்குறைய அனைவருமே அரைகுறை ஆடையுடன் தான் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது ஜோதிகா 99 சதவீதம் சிறப்பாகவே ஆடை அணிந்து வந்தார்.. இந்த விமர்சனம் மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்