CINEMA
பிலிம்பேர் விருதுக்கு படுகிளாமரில் வந்த ஜோதிகா…. ஆபாசமா தெரிந்ததா…? விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா. 2000 ஆம் வருடங்களில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பிறகு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இவர் 36 வயதிலேயே திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரைப்படத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ஜாக்பாட், ராட்சசி, தம்பி, நாச்சியார் என பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். பெண்கள் தன்னுடைய துறையில் சாதிப்பதற்கு திருமணமோ அல்லது வயதோ ஒருபோதும் தடை போட முடியாது என்பதை நிரூபித்து வருகிறார் . சமீபத்தில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடித்து அங்கும் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 69 வது பிலிம் பேர் விருது விழாவில் காதல் தி கோர் படத்துக்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு ஜோதிகா அணிந்து வந்த உடை இணையத்தில் வைரலாக மாறி உள்ளது. சிலர், ஜோதிகா இப்படி மாறிட்டாங்களே? என்று எதிர்மறையான விமர்சனம் செய்தாலும், இன்னும் சிலர் அந்த உடையில் ஜோதிகா அழகாக இருக்கிறார்… ஆபாசம் தெரியவில்லை என்று நேர்மறையான விமர்சனங்களையும் குறிப்பிட்டு வருகிறார்.