CINEMA
என்னாச்சு..! மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிற்கும் சின்னத்திரை நடிகை…. பதறிப்போன ரசிகர்கள்…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் திவ்யா கணேஷ் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேளடி கண்மணி என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை திவ்யா கணேசன். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை என்பதால் இந்த சீரியல் பாதியோடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வந்த திவ்யாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுமார் ஒரு வருடத்திற்கு மேல் இந்த சீரியலில் செழியனின் மனைவி ஜெனி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் திவ்யா டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள திவ்யா, மகாநதி தொடரில் நடிக்க முடியாமல் இருக்கிறது. எனது கதாபாத்திரத்திற்கு வேறு யாராவது நடிகையை அவர்கள் தேட வேண்டும் என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.