CINEMA
பிரபல பாலிவுட் நடிகர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி….!!
மும்பையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகரும் சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தாவின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் காலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் புல்லட்டை அகற்றி விட்டதாகவும் அவருடைய உடல்நிலை சரியாக, நன்றாக இருப்பதாகவும் மேலாளர் தகவல் அளித்துள்ளார்.