LATEST NEWS
71 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஜோதிகா….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நேற்றைய தினம் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடினார் .இவரின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மம்பட்டியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு காதல் தி கோர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
71 வயது நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக முதல்முறையாக ஜோதிகா நடிக்கின்றார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. மேலும் ஜோதிகா மற்றும் மம்முட்டி பார்ப்பதற்கு மிகவும் எங் லுக்கிங் உள்ள போஸ்டர் ஒன்றையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/mammukka/status/1582353486985170950