CINEMA
நடிகர் விஜய்யின் கடைசி படம் இதுதான்…. பிரபல இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தளபதி 65 இல் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் கடைசி படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்குவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால், அடுத்த படம் தான் கடைசி படம் என்று அறிவித்திருந்தார். இதனால், அந்த படத்தை இயக்கப்போவது யார்? என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்த தகவலை இயங்குனர் எச்.வினோத் உறுதி செய்துள்ளார். மேலும், இது அரசியல் படமில்லை, கமர்ஷியல் படம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.