CINEMA
பரபரப்பு…! நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்த இயக்குனர் சேரன்…. நடந்தது என்ன…??
தொடர்ந்து ஹாரன் அடித்ததால் கடுப்பான இயக்குநர் சேரன் நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக ஒவ்வொரு பேருந்துக்கும் தலாரூ .10,000 அபராதம் விதித்துள்ளனர் போலீசார்.
பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்றும், காவல்துறையிடம் புகார் அளிக்காமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்து, சேரன் மீது புகார் அளித்துள்ளனர்.