முடிவுக்கு வந்த பிக்பாஸ் சீசன் 6…. இந்த வாரம் முதல் புதிய ஷோ…. என்ன தெரியுமா?…. சூப்பர் அறிவிப்பு….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முடிவுக்கு வந்த பிக்பாஸ் சீசன் 6…. இந்த வாரம் முதல் புதிய ஷோ…. என்ன தெரியுமா?…. சூப்பர் அறிவிப்பு….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 14 நாட்கள் போட்டியிட்ட பிறகு நேற்று கமல்ஹாசன் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்று அறிவித்தார். அதன்படி பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் என்ற வாகையை அசீம் சூடினார். அவரைத் தொடர்ந்து விக்ரமன் இரண்டாவது இடத்தையும் ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததால் இன்று முதல் சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி ஆகிய இரண்டு சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதில் சிறகடிக்க ஆசை தொடர் இரவு 9.30 மணிக்கு, மகாநதி சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதனைப் போலவே வார இறுதி நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மாறாக வரும் வாரம் முதல் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in