படத்துல ஒண்ணுமே இல்ல, அதுக்காக மட்டும் தான் நான் நடித்தேன்…. வாரிசு குறித்து நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படத்துல ஒண்ணுமே இல்ல, அதுக்காக மட்டும் தான் நான் நடித்தேன்…. வாரிசு குறித்து நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்கிய நிலையில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஸ்மிகாவுக்கு தமிழில் இது இரண்டாவது படம். முதலில் அவர் கார்த்தி நடிப்பில் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் வாரிசு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ராஷ்மிகா இடம்பெற்று இருப்பதால் இவர் இந்த படத்தில் நடித்திருக்க தேவையில்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ராஷ்மிகா,எனக்கு நன்றாக தெரியும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் சில காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளது என்று. பெரிதாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் நான் தளபதி விஜய்க்காக மட்டும் தான் நடித்தேன் என்று சில கருத்துக்களை அவர் ஓபன் ஆக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in