LATEST NEWS
சொந்தத் தொழில் தொடங்க போகும் நடிகை பிரியா பவானி சங்கர்…. அவரே வெளியிட்ட வீடியோ…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அகிலன், இந்தியன் 2, ருத்ரன் மற்றும் 10 தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு பிசியாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் கடந்த டிசம்பர் மாதம் கடற்கரை பக்கத்தில் புதிய வீடு ஒன்று வாங்கியதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக பிரியா பவானி சங்கர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அவர் சொந்தமாக புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை தற்போது தொடங்கியுள்ளதாகவும் விரைவில் அதனை திறக்க உள்ளதாகவும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
