LATEST NEWS
ரட்சிதா கணவரை பிரிய இதுதான் காரணமா?….. பிக்பாஸில் அவரே சொன்ன உண்மை தகவல்….!!!!!

ரியலில் பிரபலமாக நடித்து வருபவர் நடிகை ரஞ்சிதா .விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் இந்த சீரியல் மூலம் அறிமுகமான இவர் .அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பிரபலமானார் .இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் நடித்து வர விஜய் டிவி சேனலுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வேறு சீரியலுக்கு நடிக்க சென்று விட்டார்.
அதன் பிறகு சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடரும் தற்போது முடிவடைந்தது .இவரின் குடும்ப வாழ்க்கையை பற்றி கூற வேண்டும் என்றால். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் நடித்து வந்தபோது அந்தத் தொடரில் நடித்திருந்த தினேஷ் கோபாலசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியலில் நடித்து வந்த நிலையில் ,திடீரென்று ரட்சிதா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வெகு நாட்களாக தங்கி உள்ளார். இவர்கள் இருவரும் பிரியவுள்ளதாக பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு அவரது கணவர் தினேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு கூட ரட்சிதா தனது கணவர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக தனது கணவரை பிரிந்து வந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது ரட்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரது அப்பா அம்மாவுக்கு கொடுக்க கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். அந்த பிரச்சனையையே நான் அதிகம் பார்த்து விட்டேன். அதனால் அவர்களுக்கு என்று ஒரு பணம் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என்று அப்பா அம்மாவிடம் தெரிவித்ததாக ரட்சிதா கூறியுள்ளார்.