LATEST NEWS
தாய் தந்தையருக்கு சிலை எழுப்பிய ரஜினி….! விரைவில் நினைவு மண்டபம் கட்டத்திட்டம்….. வெளியான தகவல்….!!!!
*தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், 71 வயதான இவர் தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவரது ரசிகர்களுடன் இருக்கும் பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி வந்ததில்லை. ரஜினி 2008 ஆம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தார் .அப்போது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களின் சந்திப்பு நடைபெற்றது .
அங்கு ஒரு ரசிகர் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் நீங்கள் பிறந்த ஊரான காட்சி குப்பத்தில் உங்கள் தாய் தந்தையருக்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா என்று கேட்க அவரது முகத்தில் பிரகாசமான ஒளி இருந்தது. இதை கேட்ட ரசிகர் யார் என்று கேட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து பேசினார்.மேலும் நாச்சி குப்பத்தில் தற்போதைய சூழல் எல்லாம் தெரிந்து கொண்டு அவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுத்தார்.
மேலும் அங்கு தனது அண்ணனை அனுப்பி தற்போதைய சூழல் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டார் .அங்கு ரஜினியின் மாமா துக்காராம் மற்றும் அத்தை சரஸ்வதி பாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் .அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது.
அங்கு முதற்கட்டமாக வேண்டி ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உதரவிட்டார்.மேலும் அங்கேயே வயல் விவசாயம் வேலைகளை மட்டும் நம்பி இருக்கும் நபர்களுக்கு அந்த கிராமத்திற்காக தண்ணீர் தேவையைப் போக்க அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.இந்த வசதியால் அந்த பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியானது.
இதைத்தொடர்ந்து தற்போது தோட்டத்திற்கு பக்கத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை ஒன்று அமைத்து இதன் மீது பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது .ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
