CINEMA
“கருடன்” சூரிக்காக மட்டும் தான் இப்படி மாறினேன்… மனம் திறந்த சசிகுமார்…!!

தமிழ் திரை உலகில் புரோட்டா சூரியாக காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்து தற்போது மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து வருகிறார் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலைப் பாகம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி சர்வதேச திரைபட விழாவில் ஒளிபரப்பப்படும் அளவிற்கு பிரபலமானது.
சமீபத்தில் சூரியின் நடிப்பில் திரில்லர் படமாக கருடன் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கூடுதலாக சமுத்திரகனி, வடிவுக்கரசி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கருடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் தான் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சசிகுமார் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சசிகுமார் சூரிக்காக மட்டும் தான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டதாகவும் அதன் பிறகு தான் கதை எப்படி இருக்கிறது என்று கேட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது படத்தில் காமெடியனாக நடித்த சூரி கதாநாயகனாக நடித்த படத்தில் சசிகுமார் கேமியோ ரோலில் நடித்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
