LATEST NEWS
“இதுதான் ஒரிஜினல் நாட்டுக்கட்ட”… வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும் சீரியல் நடிகை ரேமா அசோக்…!!
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரேமா அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். சீரியலில் இவரின் நடிப்பின் காரணமாக இவரின் தாக்கம் இளைஞர்களை தன்வசம் திரும்பி பார்க்க வைத்தது.
இவர் ஓடி விளையாடு பாப்பா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி, சரவணன் மீனாட்சி மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
அதேசமயம் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்திவரும் நிலையில் அதில் தினம்தோறும் பியூட்டி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.
அதன்படி தற்போது க்யூட்டான லக்கில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரதாகி வருகிறது.
