தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் மாவீரன்.. 25 நாட்களில் இத்தனை கோடி வசூலா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் மாவீரன்.. 25 நாட்களில் இத்தனை கோடி வசூலா..??

Published

on

தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பின் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான நிலையில் இதில் அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வசூல் சாதனை குவித்துள்ளது.

Advertisement

இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மாவீரன் திரைப்படம் இதுவரை 89 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வருகின்ற 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in