CINEMA
திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… பழையதை நினைத்து கண் கலங்கிய நடிகர் சூரி..!!

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி இன்று ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் மாமன். எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்பாக விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப்சீரிஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த படத்தின் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இதில் சூரி பேசியது வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் எட்டாவது படிக்கும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு வந்தேன். அப்போது ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம் 7 நாளைக்கு 140 ரூபாய். அதில் 70 ரூபாய் செலவு பண்ணி விட்டு மீதி 70 ஊருக்கு அனுப்புவேன். அப்போது திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். இன்று அதே திருப்பூர் எனக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தது பெருமையாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.