GALLERY
ஹாலிவுட் ஹீரோ போல சர்வதேச விழாவில் கெத்து காட்டிய சூரி, வெற்றிமாறன் உள்ளிட்ட பிரபலங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
இயக்குனர் ராம் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இவர் தற்போது நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தை உருவாக்கினார்.
அந்த படம் சர்வதேச விருது விழாக்களுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு கடல் ஏழுமலை படத்தில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நிறைய விலங்குகள் சம்பந்தமான காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் முதன்முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் திரையிடப்பட்டது.
இதற்காக படக்குழுவினர் ரோட்டர்டேம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி அஞ்சலி, சூரி, ராம், வெற்றிமாறன் ஆகியோர் நெதர்லாந்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் சூரியின் லுக்கை பார்த்து ரசிகர்கள் அவரது வளர்ச்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல சூரி நடிப்பில் உருவான விடுதலை 2 படமும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.