அட நம்ம ஸ்ரீகாந்தின் மகளா இது..? குட்டி இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வெளியான க்யூட் போட்டோஸ் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

அட நம்ம ஸ்ரீகாந்தின் மகளா இது..? குட்டி இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வெளியான க்யூட் போட்டோஸ் இதோ..!!

Published

on

பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே ஸ்ரீகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

Advertisement

இதில் பார்த்திபன் கனவு படத்திற்காக ஸ்ரீகாந்துக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.

தெலுங்கில் ஸ்ரீகாந்த் நடித்த ஆடவாரி மாடலாகு, அர்தலு வெருலே வெற்றி படமாக அமைந்தது.

Advertisement

இவர் விஜய் உடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்தார். ஆக்ஷன் படங்கள் ஸ்ரீகாந்துக்கு சரியான வெற்றியைத் தேடித் தரவில்லை.

கடைசியாக ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான மகா மற்றும் காப்பி வித் காதல் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

Advertisement

இதனால் படங்களை தேர்வு செய்வதில் ஸ்ரீகாந்த் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2007-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீகாந்த் வந்தனா தம்பதியினரின் மகள் அஹானா தனது 13-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

Advertisement

ஸ்ரீகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement