actor Sundarrajan family photos|நடிகர் சுந்தர்ராஜன் குடும்ப புகைப்படங்கள்
Connect with us

GALLERY

நடிகர் சுந்தர்ராஜனின் மனைவி இந்த பிரபலமா..? இது தெரியாம போச்சே.. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

Published

on

பிரபல நடிகரான ஆர்.சுந்தர்ராஜன் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து வைதேகி காத்திருந்தால், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, எங்கிட்ட மோதாதே, சூரியவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisement

இவர் நடித்த ஏராளமான படங்கள் வெள்ளி விழா கண்டது. கடந்த 2013-ஆம் ஆண்டில் சுந்தரராஜன் கடைசியாக சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கினார்.

நடிகர் சுந்தர்ராஜன் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர்.

Advertisement

இவர் டப்பிங் கலைஞரான துர்கா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு கார்த்திக், தீபன், அசோக் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

மகன் அசோக் சுந்தர்ராஜன் இயக்கிய சித்திரை நிலாச்சோறு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சுந்தரராஜனின் மனைவி துர்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர் தூரல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு உள்ளிட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் பேசி உள்ளார். இந்நிலையில் சுந்தரராஜன் தனது மனைவி, மகன்கள், மருமகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement