CINEMA
நடிகை திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கு… எங்கே இருக்கு தெரியுமா..? இதோ பாருங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன் பிறகு சினிமா துறையில் கால் பதித்தார். லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அன்றிலிருந்து இன்று வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை திரிஷா பெயரில் ஒரு ஊர் இருக்கிறது என்பதை ரசிகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த ஊரின் பெயர் Vijayak Trisha’. இது ஒரு சினிமா விளம்பரம் அல்ல. தற்போது இந்த தகவல் இணையத்தில் பகிரப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் இந்த இடம் உள்ளது. உலகின் உயரமான போர் பகுதி எனப்படும் சியாச்சின் செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊரை பார்த்த பார்த்தவுடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.