LATEST NEWS
உண்மை கதையா..? வேட்டையன் ரஜினி கதாபாத்திரத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..? இயக்குனரின் சூப்பர் ஸ்கெட்ச்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெய் பீம் படத்தைப் போல வேட்டையன் படமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது வேட்டையன் படத்தின் கதை களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலி என்கவுண்டருக்கு எதிராக பேசும் படைப்பாக வேட்டையன் படம் உருவாகியுள்ளதாம். ரஜினியின் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரம் போலியான என்கவுண்டருக்கு எதிராக போராடும் விதமாக உருவாகி உள்ளதாம்.
அது மட்டும் இல்லாமல் 1980-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு போலி என்கவுண்டரை மையப்படுத்தி படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரம் வித்தியாசமாக அமைந்து மாபெரும் வெற்றியை தேடி தரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.