CINEMA
யாரும் நம்பாதீங்க…. அது நாங்கள் அல்ல…. கமல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு..!!

நடிகர் கமல்ஹாசனுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தான் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்நிலையில், இந்த நிறுவனம் புதிய படங்களை தயாரிக்க இருப்பதாகவும், இதில் நடிக்க விரும்புபவர்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி சிலர் வலைதளங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்குவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.