LATEST NEWS
பாலிவுட் நடிகர்கள் மட்டுமே பயன்படுத்தும் விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகை டாப்ஸி… விலையை கேட்டா ஆடிப் போயிருவீங்க..!!

ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவரின் அடிபாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் டாப்ஸி புதிய மெர்சிடிஸ் மே பேக் ஜி எல் எஸ் 600 காரை வாங்கியுள்ளார். பல்லாடியம் சில்வர் கலரில் இவர் வாங்கியுள்ள இந்த காரின் விலை மூன்று புள்ளி ஐந்து கோடி ரூபாய் ஆகும். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த காரை வைத்துள்ள நிலையில் தற்போது டாப்ஸி இந்த காரை வாங்கியுள்ளதால் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.