இது 100% உண்மையா?.. நடிகைகளின் அந்த விஷயத்தை போட்டுடைத்த லட்சுமி மேனன்.. பகீர் கிளப்பும் பேட்டி..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இது 100% உண்மையா?.. நடிகைகளின் அந்த விஷயத்தை போட்டுடைத்த லட்சுமி மேனன்.. பகீர் கிளப்பும் பேட்டி..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.இவர் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். தனது 16 வயதில் நடிகையாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கும்கி, குட்டி புலி மற்றும் பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை,கொம்பன் மற்றும் வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

பின்னர் இவர் நடித்த மிருதன் மற்றும் ரெக்க போன்ற திரைப்படங்களில்மார்க்கெட் குறைய தொடங்கியதால் படிப்பில் கவனம் செலுத்த சினிமாவில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் லட்சுமி மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியானது உண்மையா பொய்யா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன் , இது நூறு சதவீதம் பொய்யானது என்று நான் சொல்ல மாட்டேன். அதிலும் உண்மை உள்ளது. அப்படியும் உண்மையிலேயே நடக்கிறது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்குத் தெரியாமல் வெளியே லீக் ஆகி விடுகின்றது. இது போன்ற வீடியோக்கள் வெளியானது கிட்டத்தட்ட 25 சதவீதம் உண்மைதான் என்று லட்சுமி மேனன் வெளிப்படையாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

Advertisement