CINEMA
இதை விமர்சிப்பார்கள் என்று எனக்கு முன்பே தெரியும்…. தக் லைப் படம் குறித்து திரிஷா ஓபன் டாக்..!!

தென்னிந்த சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் திரிஷா. 42 வயது எட்டிய இவர் இன்னும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரிஷா நடிப்பில் தற்போது வரவுள்ள படம் தக் லைப். மணிரத்தினம் இயக்கத்தில் கமல், திரிஷா, சிம்பு, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று திரிஷா நடனத்தில் சுகர் பேபி என்ற இரண்டாவது பாடல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார், அதில், இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்று சொல்லும் பொழுது நான் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அப்போது எங்களுடைய ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும் அதே நேரம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்கு தெரியும். இவை அனைத்தும் அறிந்த பிறகு தான் நான் இந்த படத்தில் கையெழுத்திட்டேன். கமலஹாசன், மணிரத்தினம் இருவரும் எவ்வளவு புரிதலோடு ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.