LATEST NEWS
மீண்டும் ட்ரெண்டாகும் விஜய், திரிஷா ஹாஸ்டேக்…. எல்லாம் நல்ல விஷயம் தான்…! ரெடியா இருங்க நண்பா, நண்பிகளே…!!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து மாஸ் திரைப்படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் திரிஷா பெயர் மீண்டும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. அதற்கு காரணம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றது.

#image_title
விஜய், திரிஷா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் விஜய் மற்றும் திரிஷா கெரியரில் மிக முக்கிய திறப்புமுனையாக அமைந்தது. கில்லி திரைப்படத்திற்கு பிறகு தான் விஜய் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

#image_title
கில்லி திரைப்படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகப்போகின்றது. தற்போது பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் கெரியரில் முக்கிய படமாக அமைந்த கில்லி படத்தையும் மீண்டும் ரிலீஸ் செய்யப் போகிறார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ்-ஆக இருக்கின்றது. இதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் மீண்டும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இதனால் விஜய் மற்றும் திரிஷா பெயர்களை எக்ஸ்ட்ளத்தில் ட்ரண்டாக்கி வருகிறார்கள்.