LATEST NEWS
பாட்டு பாடி அழைத்த கங்கை அமரன்…. கதவை பூட்டி துரத்திய கனகா…. அறிமுகப்படுத்தியவருக்கே இந்த நிலைமையா?…!!!
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கனகா. இவர் தற்போது என்ன ஆனார் என்பது தெரியாமலேயே இருக்கின்றன. சமீபத்தில் குட்டி பத்மினி உடன் கனகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து அவர் பேட்டி கொடுப்பார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது. பழம் பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா.
இவர் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் பிசியாக வலம் வந்தார். இப்படி இருக்கையில் திடீரென்று அவரது அம்மா மரணம் இவரை பெரிய அளவில் பாதித்தது. ஒரு சில திரைப்படங்களுக்கு பின்பு காணாமல் போன கனகா தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. வெளியில் வருவதுமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் குட்டி பத்மினி இவரை சந்தித்திருக்கின்றார். அதன்பிறகு இவருடன் பேட்டி வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் கடைசிவரை அது நடக்கவில்லை. இந்நிலையில் கனகா குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் கனகாவை அறிமுகப்படுத்தியவர் கங்கை அமரன்.
அவர் ஒரு முறை கனகாவை சந்திப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பார்த்தவுடன் கனகா வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாராம். கங்கை அமரன் பாட்டு பாடியும் கனகா திறக்கவில்லை. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.