CINEMA
“தவமின்றி கிடைத்த வரமே” விஷேஷமான நாளில் தனது மனைவி குறித்து உருக்கமாக பதிவிட்ட இந்திரஜா கணவர்..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர் புகழ் பயன்படுத்தி கிடைக்கும் இடங்கள் எல்லாம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார். வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக இப்போது அசத்தி வருகிறார். இவருடைய மகள் இந்திரஜா. இவர் விஜயின் பிகில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தன்னுடைய முறைமாமன் ஆன கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
View this post on Instagram
சில தினங்களுக்கு முன்பு கூட மகன் பிறந்த 100 ஆவது நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் இந்திரஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவர் குறித்து கணவர் கார்த்திக் உருக்கமாக பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், அன்பு பொண்டாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ என் வாழ்வில் வந்த பிறகு என்னுடைய மகிழ்ச்சியை மீண்டும் திருப்தி எழுதினாய். ஒவ்வொரு நாளையும் காதல் கதையாக மாற்றுவதற்கு உனக்கு நன்றி. இன்று போல் எப்போதும் உன்னை நீ கொண்டாடு. தவமின்றி கிடைத்த வரமே லவ் யூ பாப்பா..! என்று பதிவிட்டுள்ளார்.