CINEMA
தாய்ப்பாலில் தன்னுடைய மகனுக்காக இந்திரஜா செய்த விஷயம்… வியப்படைந்து போன இணையவாசிகள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர் புகழ் பயன்படுத்தி கிடைக்கும் இடங்கள் எல்லாம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார். வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக இப்போது அசத்தி வருகிறார். இவருடைய மகள் இந்திரஜா. இவர் விஜயின் பிகில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார்.
View this post on Instagram
அதன் பிறகு தன்னுடைய முறைமாமன் ஆன கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட மகன் பிறந்த 100 ஆவது நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் இந்திரஜா மகனுக்கு தன்னுடைய சொந்த தாய் பாலைக் கொடுத்து தங்க நகை செய்துள்ளார். இந்த வீடீயோவை இணையத்தில் வெளியிட்டு, தாய்பாலில் செய்த நகையை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. மகனுக்கு எப்போது போட்டு பார்ப்பேன் என்றும் ஆர்வமாக உள்ளது..” என்றும் பகிர்ந்துள்ளார்.