CINEMA
சினிமாவிலிருந்து ஓய்வா..? உலகநாயகன் சொன்ன அதிரடி பதில்… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலகநாயகன் என்றும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமலஹாசன். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரொமோஷன் பணிகளை பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கமலஹாசன் சினிமா குறித்து பேசிய விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது; அதில் சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல. ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.
கதைகள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்வோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் எப்போதும் பாடுபடுவேன். இந்த பொறுப்பில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அது அணையும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது இவருடைய இந்த பதிலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.