LATEST NEWS
நடிகர் ரஜினிகாந்தை வரவேற்ற சீமான்!!!ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை!பரபரப்பு செய்தி …

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பு தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் வந்தனர்.
தமிழனை தமிழன் தான் ஆளனும், கன்னடன் ஆள கூடாது என்றெல்லாம் கூறி வந்தனர். இப்படி கூறியவர்களில் சீமானும் ஒருவர்.
இந்நிலையில் ரஜினி நான் முதல்வராக மாட்டேன், நான் கட்சியின் தலைவராக தான் இருப்பேன். ஆட்சி தலைவர் வேறொரு உயர்ந்த மனிதராக இருப்பார் என்று.நெகிழ்ச்சி அடையும்படி பேசினார்..
ரஜினியின் இந்த கொள்கையை சீமானும் வரவேற்றுள்ளார். இது பற்றி ராகவா லாரன்ஸ் கவிதை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை
சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை ,
சுவை புதிது,
பொருள் புதிது ,
வளம் புதிது,
சொற் புதிது,
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை !
”கவியரசர் இல்லை என்ற வசை என்னால் கழிந்தது ”
”என் பாட்டுக்கு ராஜா ”
இது காட்டுக்கு ராஜா ”
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள் !
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின்
எண்ணங்கள் நிறைவேற,
நன் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!
அன்புடன்
ராகவா லாரான்ஸ் …