CINEMA
“தங்கலான்” OTT-யில் வெளியாவதில் சிக்கல்…? பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படம் OTT-யில் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த படம் செப்.20 நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திரையரங்கில் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லையாம். இந்த நிலையில், அதை காரணம் காட்டி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொகையை குறைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் அடுத்த மாதம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.