LATEST NEWS
நயன்தாரா விக்னேஷை விவாகரத்து செய்கிறாரா..? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்னேஷ்.. அவரே பதிவிட்ட புகைப்படம்..!!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர்ந்து. கடந்த 2022-ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இதனை அடுத்து வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. எப்போதும் நயன்தாரா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் போட்டோஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவார். சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்தது பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்களா என வதந்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது மனைவியுடன் நெருக்கமாக இசை கேட்கும் வீடியோவை வெளியிட்டார்.
மேலும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சவுதி அரேபியாவில் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நேற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.