LATEST NEWS
Ph.D டாக்டர் பெற்ற அலைபாயுதே ஷாலினி அக்கா ஸ்வர்ணமால்யா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அப்பாவாக நடித்த வெள்ளித் திரையில் கால் தடம் பதித்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த எங்கள் அண்ணா மற்றும் மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது. இந்நிலையில் இவர் தனது 2012 ஆம் ஆண்டு பிஎச்டி டாக்டர் பட்டத்தை முடித்த நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வர அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
